Header Ads

Sunday, July 5, 2020

Lockdown Extended | கேரளாவில் லாக்டவுன் ஓராண்டுக்கு நீட்டிப்பு..

Lockdown Extended | கேரளாவில் லாக்டவுன் ஓராண்டுக்கு நீட்டிப்பு..

Lockdown Extended

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்று விதிமுறைகளை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் மறு உத்தரவு வரும் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓராண்டு காலத்திற்கு மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். 

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இதன்படி அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. அரசு அனுமதி பெற்று மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் சமூக கூட்டங்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. 10 பேரும் மாஸ்க் அணிய வேண்டும்.

Lockdown Extended


கூட்டத்திற்கு அனுமதி இல்லை

 சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். அடுத்த ஓராண்டில் எந்த விதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, ஊர்வலங்கள் உள்ளிட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை.

முககவசம் அவசியம்

Lockdown Extended


திருமண நிகழ்ச்சிகளில்

 50 பேருக்கு பங்கேற்க அனுமதி இல்லை. 50 பேரும் முககவசம் அணிய வேண்டும்.திருமண நிகழ்ச்சியில் ஆறு அடி இடைவெளி அவசியம். திருமண ஏற்பாட்டாளர்கள் சானிடைசர் அனைவருக்கும் வழங்க வேணடும்.

கோவிட் மரணம் என்றால் இறுதிச் சடங்குகளில், ஒரு நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் இருபது நபர்களைத் தாண்டக்கூடாது, அவர்கள் அனைவரும் முகம் கவசம் அணிந்து, சானிடிசரைப் பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு இடையே ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கோவிட் மரணம் என்று சந்தேகிக்கப்பட்டால், இந்திய அரசும் மாநில அரசும் வழங்கிய நிலையான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

சமூக இடைவெளி 

Lockdown Extended

அடுத்த ஓராண்டிற்கு மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில், பணியிடங்களில், பேருந்துகளில், வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம். அடுத்த ஓராண்டிற்கு மக்கள் பொது இடங்களில் 6 அடி இடைவெளியைவிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடக்கூடாது. 

6 அடி இடைவெளி

 வணிகம் செய்யும் இடங்களில் மக்களிடையே குறைந்தது 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும். கூட்டம் கூட கூடாது. வணிகம் செய்யுங்கள் இடங்களில் அதிக மக்கள் ஒரே இடத்தில் குவியக்கூடாது. கட்டிடத்தின் அளவை பொறுத்தே ஆட்களை அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி வணிகம் செய்ய வேண்டும்.




No comments:

Post a Comment

Don't add spam messages

Popular Posts

Popular Feed

Recent Story

Featured News