Header Ads

Wednesday, July 1, 2020

Uses of sugar beet | சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்கள்


Uses of sugar beet | சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்! 

Uses of sugar beet
பொதுவாக கிழங்கு வகைகளை சாப்பிட்டால் வெயிட் போடும்... வாயுத்தொல்லையை உண்டாக்கும் என்று சொல்லியே அதனை ஒதுக்கிவிடுவோம். எக்கச்சக்கமான மருத்துவ குணங்களை தன்னுள்ளே ஒளித்துக்கொண்டு இனிப்பாய் இனிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்!

எங்கிருந்து வந்தது? 


சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதன் முதலாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயினுக்கு திரும்பிய போது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் கொண்டு வந்தார். ஸ்பெயினில் பரவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஸ்பெயின் நாட்டினர் ஆசியாவுக்கு கொண்டு வந்தனர். இப்படியே உலகம் முழுவதும் பரவிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

எடை அதிகரிக்குமா?


சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். நார்ச்சத்து, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும்.இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிக்காது.

ரத்த அழுத்தம் :


இதில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல். அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உண்பது ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.

நோயை எதிர்க்கும் :


மற்ற கிழங்கு வகைகளை விட இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு உதவிடும். இவை சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும்.

இலை :கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. இலையை பச்சையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறியும். வலி, வீக்கம் குறையும்.

அரிப்பு : தோலில் அலர்ஜி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட்டால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனோடு மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் . பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அதனை அரிப்பு உள்ள இடத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Don't add spam messages

Popular Posts

Popular Feed

Recent Story

Featured News