how to use cardamom | ஏலக்காயின் மருத்துவ பயன்கள்
how to use cardamom ஏலக்காய் இந்திய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருளாகும்.இந்த மசாலா பொருள் உலகளவில் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அமெரிக்காவில் உள்ள கோட் மாலா என்ற நகரம் ஏலக்காய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.
ஆனால் இருந்தாலும் இந்த ஏலக்காய் நமது இந்திய கண்டத்தில் இருந்து தான் தோன்றியது.நாம இப்பொழுது உங்களை ஆச்சரியமூட்டும் வகையில் ஏலக்காயின் மருத்துவ பயன்களின் பட்டியலை பார்க்க போறோம். ஏலக்காய் உலகில் 3 வது விலையுயர்ந்த மசாலா பொருள் இது பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும் உலகளவில் இது டைமண்ட்க்கு நிகரானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இது நிறைய மருத்துவ பயன்களை தன்னுள் கொண்டுள்ளது. குங்குமப் பூ மற்றும் வெண்ணிலாக்கு அடுத்த படியாக இந்த ஏலக்காய் தான் விலையுயர்ந்தாக உள்ளது.
இரண்டு விதமான ஏலக்காய் வகைகள் :
- கருப்பு ஏலக்காய்
- பச்சை ஏலக்காய்
இது உண்மையான இயற்கை ஏலக்காயும் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் பயன்படுகிறது. கீர், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை பொருளாக பயன்படுகிறது. கருப்பு ஏலக்காய் இது வாசனைக்காக பயன்படுத்தாமல் திண்பன்டங்களில் பயன்படுகிறது. இது தான் கரம் மசாலா பொருட்களிலும் பயன்படுகிறது. இதைத் தவிர இந்த இரண்டு ஏலக்காய்களும் மருத்துவ நன்மைகளையும் அள்ளித் தருகின்றன. மனிதன் நாகரீகம் தோன்றிய கணக்குப் படி பார்த்தால் ஏலக்காய் 4000 வருடங்களுக்கு முன்னாடியே தோன்றியுள்ளது. இதன் படி பார்த்தால் பழைய எகிப்து, ரோமன் மற்றும் கிரீக் போன்ற காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது ஸ்கேன்டினேவியன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மசாலா பொருள் இந்தியாவில் தோன்றியதாக இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள கோட் மாலா உலகளவில் ஏலக்காய் உற்பத்தியில் முன்னணியில் சிறந்து விளங்குகிறது. ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக மட்டும் இல்லாமல் மூலிகை பொருளாகவும் பயன்படுகிறது. இது நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து பித்த நீரை அதிகரித்து சீரண சக்தியை அதிகரிக்கிறது. எதுக்களித்தல், வாய்வு தொல்லை போன்றவற்றை சரியாக்குகிறது. ஏலக்காய் உங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஏலக்காயை தினமும் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் லிப்பிட்டை அதிகரித்து இரத்தம் கட்டாமல் தடுக்கிறது. எனவே இது பக்க வாதத்தை தடுக்கிறது. இதற்கு பச்சை ஏலக்காய் விட கருப்பு ஏலக்காய் மிகவும் சிறந்தது. நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் போதும் உங்கள் மன அழுத்தம் காணாமல் போய்விடும்.
பச்சை ஏலக்காய் உங்கள் சுவாசத்தை சரியாக்குகிறது., மூச்சுத் திணறல், இருமல், மூச்சை குறைவாக இழுத்தல், ஆஸ்துமா அறிகுறிகள் போன்றவற்றை தடுக்கிறது ஏலக்காயில் உள்ள மாங்கனீஸ் சத்து டயாபெட்டீஸ் வாராமல் தடுக்கிறது. ஆனால் இதைப் பற்றிய ஆராய்ச்சி போய்க் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் முடிவு பண்ணவில்லை நமது வாயில் உள்ள கெட்ட கிருமிகளை போக்குவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெப்ட்ரோகோக்கஸ் மியூட்ன்ஸ் போன்ற பாக்டீயாக்களை அழிக்கிறது. உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கிறது. எனவே இது பல் இடுக்குகளில் படிந்த கரைகள், கிருமிகள் போன்றவற்றை அகற்றி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. பசியின்மை பிரச்சினை தான் பெரும்பாலான நோய்க்கு காரணமாக உள்ளது. புற்று நோய், அனோர்ஷியா போன்ற நோய்களுக்கு இது தான் காரணமாக உள்ளது. எனவே இதை தடுக்க உங்கள் உணவுகளில் ஏலக்காய் சேர்த்து கொண்டாலே போதும்.
ஏலக்காயில் உள்ள ஷைனோல் ஆற்றல் மிக்க நரம்புகளை தூண்டி ஆண்மையை அதிகரிக்கிறது உங்களுக்கு நிறுத்த முடியாத தொடர்ச்சியான விக்கல்கள் ஏற்பட்டால் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் போதும். உங்கள் விக்கல் பறந்து போய்விடும். ஏனெனில் இது விக்கல் உண்டாவதற்கான வால்வை ரிலாக்ஸ் செய்கிறது 1 கிராம் ஏலக்காய் +1 கிராம் பட்டை +125 மில்லி கிராம் கருப்பு மிளகு +1 டேபிள் ஸ்பூன் தேன் = தொண்டை புண் நிவாரணி மருந்து இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை எடுத்து கொண்டால் போதும் இருமல், தொண்டை புண் குணமாகி விடும். ஏலக்காயில் விட்டமின் சி உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பைடோநியூட்ரியன்ட்ஸ் போன்றவை சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சுருக்கம், சரும கோடுகள், வயதாகுவதை தடுக்கிறது ஏலக்காய் பொடியை 1 டீ ஸ்பூன் தேனுடன் சேர்த்து முகத்திற்கு தொடர்ந்து மாஸ்க் போட்டு வந்தால் சரும நிறமாற்றம், கரும்புள்ளிகள், தழும்பு மற்றும் பருக்கள் போன்றவைகளும் சரியாகுகிறது.
- கருப்பு ஏலக்காய்
- பச்சை ஏலக்காய்
No comments:
Post a Comment
Don't add spam messages